வெளிநாட்டில் உள்ள கணவன் சந்தேகப்பட்டதால் இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (20.09.2018) இடம்பெற்றுள்ளது,
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,
யாழ் பருத்தித்துறையை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், கனடாவை சேர்ந்த 34 வயது இளைஞனுக்கும் பெரியோர்கள் இணைந்து கடந்த மாதம் இந்தியாவில் வைத்து திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு பின்னர் குறித்த இளைஞன் கனடாவுக்கும், பெண் யாழ்ப்பாணத்துக்கும் சென்றனர், அத்துடன் இளைஞனுக்கு பெண்னின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது, அதன் பின்னர் இருவரும் தொலைபேசியில் அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் வீட்டில் உள்ள அறையொன்றில் வீடியோ அழைப்பில் கணவன் காத்திருக்க அவர் முன்னிலையில் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனடியாக சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் உட்பட்ட உறவினர்கள் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றியுள்ளனர், இச்சம்பவத்தால் குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.
இவ்வாறு வெளிநாட்டு மாப்பிள்ளைகளால் தற்கொலை செய்துகொண்ட, தற்கொலைக்கு முயன்ற சம்பவங்கள் இந்த வருடத்தில் மட்டும் பல இடம்பெற்றுள்ளது,
திருமணம் என்பது இரண்டு மனங்கள் புரிந்து இணைவது, தவிர போலி ஹௌரவத்திற்காக யார்? எப்படியானவர் என்று கூட தெரியாத வெளிநாட்டில் வசிக்கும் ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுக்க துடிக்கும் வெளிநாட்டு மோகம் கொண்ட பெற்றோர்களுக்கு இது ஒரு பாடம்!