முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவமதிக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்-க்கு அக்டோபர் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் சென்னை வள்ளுவா் கோட்டம் பகுதியில் முக்குலத்தோா் புலிப்படை அமைப்பு சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் காவல்துறையினரை விமர்சித்து சா்ச்சைக்குறிய கருத்துகளை பேசினாா். மேலும் முதல்வா், காவல் துறையினரை அவமதிக்கும் வகையில் அவா் பேசியுள்ளதாக அரசியல் தலைவா்கள் கருத்துக்களையும், கண்டனங்களையும் தொிவித்தனா்.
இதனைத் தொடா்ந்து கருணாஸை நுங்கம்பாக்கம் காவல்துறையினா் இன்று காலை அவரது வீட்டில் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட கருணாஸ் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கருணாஸிடம் 3 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னா் எழும்பூாில் உள்ள நீதிபதி கோபிநாத் இல்லத்தில் கருணாஸ் ஆஜா்படுத்தப்பட்டாா்.
அப்போது தன்மீது போடப்பட்டுள்ள சட்டப்பிாிவு 307 (கொலை முயற்சி) குறித்து கருணாஸ் தரப்பில் நீதிபதி முன் முறையிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து கருணாஸ் மீதானா சட்டப்பிரிவு 307ஐ ரத்து செய்வதாக உத்தரவிட்ட நீதிபதி கருணாஸ் மற்றும் காா்த்திக் ஆகியோரை அக்டோபா் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டாா்.
இந்நிலையில், கருணாஸ் தரப்பில் நாளை காலை 10 மணிக்கு ஜாமீன் கோாி மனுத்தாக்கல் செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞா் தொிவித்துள்ளாா்.