பொலன்னறுவை – பலுகஸ்தமன பிரதேசத்தில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலன்னறுவைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கொலை செய்யப்பட்டவரின் மகன் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவைப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அரிசி ஆலையொன்றின் முகாமையாளரான 60 வயதுடைய தந்தைக்கும் மகனிற்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித்தகராறு காரணமாகவே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்தாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்றுமாலை இடம்பெற்ற கருத்து முரண்பாடு காரணமாக ஏற்பட்ட தகராறில் தந்தையை அவரது மகன் தடியொன்றினால் தாக்கியுள்ளார்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் இரவு 9 மணியளவில் உயிரிழந்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலன்னறுவைப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.