கால்பந்து விளையாட்டை பார்க்க செல்ல பெண் ஒருவர் ஆண் வேடமிட்டு மைதானத்திற்குள் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் தெஹ்ரான் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஸைனபா. இவருக்கு கால்பந்து விளையாட்டு மிகவும் பிடிக்கும்.ஆனால் அவர் இதுவரை எந்த போட்டிகளையும் நேரில் சென்று பார்த்தது இல்லை
ஏனெனில் ஈரானில் ஆண்கள் பங்கு பெறும் விளையாட்டு போட்டிகளை பெண்கள் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கால்பந்து போட்டியை பார்க்க வேண்டும் என ஸைனபா அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தெஹ்ரான் நடைபெற்ற கால்பந்து விளையாட்டை நேரில் சென்று காண முடிவு செய்து ஆண் போல வேடமிட்டு மைதானத்திற்கு சென்றுள்ளார் , இந்நிலையில் அவர் மைதானத்தின் உள்ளே செல்ல முயற்சி செய்தபோது அங்குள்ள காவல் அதிகாரிகள் அவரை சோதனை செய்துள்ளனர்.
பின் அவர் பெண் என்பது தெரிய வந்ததும் போலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
For watching a football match some girls in Iran went to jail and court,
but nothing can stop them.Zeinab posted a photo on her Instagram account yesterday from Police’s van during Perspolis match,
she usually dressed as a boy and snuck in to stadiums.@FIFAcom pic.twitter.com/DBd3N4ketB— OpenStadiums (@openStadiums) September 20, 2018