பாதீடு மீதான விவாதம் இடம்பெறுகின்ற காலப்பகுதியில் அமைச்சர்கள் மற்றும் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளைப் புறக்கணித்து வெளிநாடுகளுக்கு செல்வதைத் தடைசெய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்
இதேநேரம், நாடாளுமன்றத்தின் வழமையான அமர்வுகள் இடம்பெறும் காலப்பகுதியிலும், உறுப்பினர்கள் உரிய முறையில் அறிவித்தல் விடுத்து அனுமதி பெற்றுக்கொண்டதன் பின்னரே வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என்றும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதங்கள் இடம்பெறுகின்றபோது, சபை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கான உறுப்பினர்களைக் கொண்ட கூட்ட மதிப்பெண் சபையில் காணப்படாத காரணத்தினால் சபை நடவடிக்கைகள் பல தடைவைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.