மூன்று ஆண்டுகள் கெடாமல் இருக்கும் பீட்சாவை அமெரிக்க ராணுவ சமையல் பிரிவு வல்லுனர்கள் தயாரித்துள்ளனர்.
சாப்பாடு பிரியர்களை சுண்டி இழுக்கும் பீட்சா எனும் ரொட்டி வகை உணவு அனைத்து தரப்பு மக்களிடத்திலும் பிரபலமானவை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். பீட்சாவை அறியாதவர்கள் என்று யாரும் இல்லை.
இத்தாலிய உணவான பீட்சாவை உலகில் எந்த நாடுகளுக்கு சென்றாலும் தெரியதவர்கள் இல்லை. இச்சிறப்பு வாய்ந்த பீட்சாவை தற்போது 3 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும்படி தயாரித்து இருக்கிறார்கள்.
மூன்று ஆண்டுகள் கெடாமல் இருக்கும் இந்த பீட்சாவை அமெரிக்க ராணுவ போர் போன்ற அவசர நேரங்களில் இந்த பீட்சாவை ராணுவ வீரர்கள் சாப்பிட பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த பீட்சாவுக்கு “மீல்ஸ் ரெடி பார் ஈட்” என பெயரிடப்பட்டுள்ளது. இதன் சுவை மூன்ற வருடங்கள் வரை மாறாமல் இருக்க தயாரிக்கப்பட்டுள்ளது. இவை ராணுவ வீரர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. போர்கால அடிப்படையில் இந்த பீட்சாவனது உணவில் உலகளவில் வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது.