தமிழ் சினிமாவில் மிகவும் பரிட்சியமான குணச்சித்திர நடிகர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம், அந்த வகையில் தமிழ் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பின்னர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை தேவதர்ஷினி.
சான் டிவியில் ஒளிபரப்பான மர்ம தேசம் என்ற தொடரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை தேவதர்ஷினி. அதன் பின்னர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்த இவர் பார்த்திபன் கனவு படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அதன் பின்னர் பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும், குணசித்ர வேடத்திலும் அசத்தியுள்ளார் நடிகை தேவதர்ஷினி.
கடந்த 2002 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் சேட்டன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை தேவதர்ஷினி.
அவரும் மக்களுக்கு பரிட்சியமான ஒரு முகம் தான். மேலும், இவர்கள் இருவருக்கும் 14 வயதில் நியாத்தி கடாம்பி என்ற மகளும் இருக்கிறார்.
தேவதர்ஷினியின் மகளான நியாத்தி கடாம்பியும் தற்போது சினிமாவில் கால் பதிக்கவுள்ளார். தற்போது இவர், விஜய்சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 96 படத்தில் நடித்துள்ளார் நியாத்தி கடாம்பி.
இந்த படத்தில் ஒரு ப்ளாஸ் பேக் காட்சியில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நாடித்துள்ளார் என்று நியாத்தி கடாம்பியின் அம்மாவான நடிகை தேவதர்ஷினி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.