பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. யாரும் எதிர்பார்க்காத பாலாஜியும், டைட்டில் வின்னராக வர தகுதியானவரான யாஷிகாவும் இந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். ஆனால் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்வர்யா வெளியேறவில்லை.
இதைத் தொடர்ந்து பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கு ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் தெரிவானர். ஆனாலும் கடைசி வரை ஐஸ்வர்யா பிக்பாஸால் காப்பாற்றப்பட்டு வருகிறார் என்ற வருத்தம் பார்வையாளர்களுக்கு உள்ளது. இதுவரை ஐஸ்வர்யாவை காப்பாற்றி வந்த பிக்பாஸ் அவரை டைட்டில் வின்னராக அறிவிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்பிடி அறிவித்தால் நிச்சயம் விஜய் டிவிக்கும், தொகுப்பாளராக கமலிற்கும் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இந்த முறை இறுதிப்போட்டிக்கு பெண்கள் மட்டுமே தெரிவாகியுள்ளார். பிக்பாஸ் வரலாற்றிலே இதுவே முதல் முறை. பல சீசன்களை தாண்டிய ஹிந்தி, தெலுங்கு போன்ற எந்த சீசன்களிலும் இவ்வாறு பெண்கள் மட்டும் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.