சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சினால் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை விசேட பயிற்சி ஒன்றுக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபருடன் பிரதி அமைச்சர் நளின் பண்டார, சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஆகியோரும் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளனர். ஸ்கொட்லாந்திலேயே இப்பயிற்சி நெறி இடம்பெறவுள்ளது.
இப்பயிற்சி நெறியில் கலந்துகொள்வதற்கான குழுவினர் எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்கையிலிருந்து பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொலிஸ் மா அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசாரணைகள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவினால் நியமிக்கப்பட்ட குழுவின் கீழ் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.