மக்களால் இடித்து நொறுக்கப்பட்ட பெர்லின் சுவரை, ஒரு மாபெரும் திரைப்பட – கலை திட்டத்திற்காக மீண்டும் கட்டி எழுப்ப திட்டமிட்ட ஒரு பிரபலத்தின் திட்டமும் பெர்லின் சுவரைப் போலவே உடைத்து நொறுக்கப்பட்டது.
ரஷ்ய படத் தயாரிப்பாளரான Ilya Khrzhanovsky, இடித்து நொறுக்கப்பட்ட பெர்லின் சுவரின் ஒரு பகுதியை பிரமாண்ட திரைப்படம் ஒன்றிற்காக மீண்டும் கட்டி எழுப்ப பெர்லின் நகர அதிகாரிகளிடம் அனுமதி கோரியிருந்தார்.
கம்யூனிஸ்ட் ஆட்சியில் கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்த மக்களை இந்த விடயம் காயப்படுத்தும் என விமர்சகர்கள் கடுமையாக விமர்சிக்க இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உருவானது.
பெர்லின் மாகாண கவுன்சிலரான Sabine Weissler, இத்திட்டத்தால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள மக்களின் கருத்துகளை கேட்பதற்கு போதுமான நேரம் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த விடயம் பாதுகாப்பான முறையில் நடத்தப்படும் என்பதற்கான உறுதியை அதற்கு பொறுப்பான மக்களால் கொடுக்க இயலவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அக்டோபர் மாதம் கட்டத்துவங்கி, பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட நாளாகிய நவம்பர் 9ஆம் திகதி அதை இடிப்பது என திட்டமிடப்பட்டிருக்கும் இந்த நிகழ்விற்கு அதற்கு பொறுப்பான அமைப்பாளர்கள் ஆகஸ்டு மாதம்தான் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார்கள்.
அதனால் இத்திட்டத்திற்கு அனுமதியளிக்க முடியாது என அதிகாரிகள் மறுத்து விட்டார்கள்.