வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் மோசமாக நடந்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயணிகளின் பயணப் பொதிகளிலிருந்து பொருட்களை அதிகாரிகள் எடுத்துக் கொள்வதாக தெரிய வருகிறது.
பணிப்பெண்ணாக வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பிய பெண் ஒருவரிடம் அதிகாரிகள் பழங்களை பெற்றுக் கொள்ளும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
குறித்த பெண் பல முறை கெஞ்சிய போதிலும் அந்த பழங்களை கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
எனினும் இது தொடர்பில் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகளிடம் வினவிய போது, அவ்வாறான பொருட்களை இலங்கைக்குள் கொண்டுவர அனுமதிப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.
மரக்கறி, பழங்கள் மற்றும் மீன் போன்ற பொருட்களை கொண்டுவர அனுமதிக்க முடியாது. அவ்வாறான பொருட்கள் ஆரோக்கியமற்றது. அவ்வாறான பொருட்களை கொண்டு வர உரிய அனுமதி பத்திரம் பெற்றிருக்க வேண்டும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்..
பழங்கள் போன்றவற்றில் உள்ள புழுக்கள் மற்றும் பூச்சிகளினால் ஆபத்துக்கள் ஏற்படக் கூடும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.