திருமணத்திற்காக அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட ஆபத்து
இலங்கை வந்த வெளிநாட்டு குழுவினர் உயிருக்கு போராடிய நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, நிலாவெளி கடலில் குளித்து கொண்டிருந்த 6 வெளிநாட்டவர்கள் கடல் நீரில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர்.
தீவிரமாக செயற்பட்ட இலங்கை பொலிஸார் குறித்த ஆறு பேரையும் காப்பாற்றியுள்ளனர்.
காப்பாற்றப்பட்டவர்களில் 5 இந்திய பெண்களும் ஒரு அமெரிக்க பிரஜையும் அடங்கும். இவர்களில் 5 வயது சிறுமியும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடலில் மூழ்கியவர்கள் காப்பாற்றுமாறு கூச்சலிட்ட போது, பொலிஸ் அதிகாரிகள் கடலில் நீந்தி சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியுள்ளனர்.
வெளிநாட்டு தம்பதி ஒன்றின் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள வந்தவர்களே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.