பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி ஒரு பிரம்மாண்டத்தோடு ஆரம்பிக்கப்பட்டது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எப்படி 100 நாட்கள் ஓடியது என்பது தெரியவில்லை, நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது.
இந்த நேரத்தில் மக்களை தாண்டி போட்டியாளர்களுக்கும் ஒரு அதிர்ச்சி செய்தி கூறியிருக்கிறார்கள் வைஷ்ணவி மற்றும் ரம்யா. கடைசியில் இறுதிகட்ட மேடையை ஏற போகிறோம், பைனலுக்கு வந்துவிட்டோம் என்று சந்தோஷத்தில் இருந்த பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு ஷாக்.
இந்த நான்கு பேரில் இருந்து ஒருவர் எலிமினேட் செய்யப்பட இருக்கிறாராம். அது யார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வர இருக்கிறது.
நிஜமாக எலிமினேஷனா இல்லை பிக்பாஸ் விளையாட்டில் ஒரு விளையாட்டு நடத்துகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
என்னது இன்னைக்கும் #Eviction இருக்கா?! ?? #பிக்பாஸ் – இன்று இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/GL3J27juHq
— Vijay Television (@vijaytelevision) September 24, 2018