Loading...
பொத்துவில் – அக்கறைப்பற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் 2 மகள்கள் உயிரிழந்துள்ளனர்.
வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் வாகனத்தில் மோதுண்டு தாய், மகள்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
விபத்தில் 34 வயதான தாய், 6 வயது மற்றும் 12 வயதான மகள்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 11 வயதான மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் மோட்டார் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...