இத்தாலியில் இயற்கையை விரும்பும் காதல் ஜோடி ஒன்று நிர்வாணமாக திருமணம் செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை காதல் ஜோடியினர் வித்தியாச வித்தியாசமாய் திருமணம் செய்து கொண்டிருப்பதை நாம் கேள்விபட்டிருப்போம். கப்பலில் திருமணம், ஃப்லைட்டில் திருமணம் என பல வகை திருமணங்ளை பார்த்துள்ளோம்.
இத்தாலியை சேர்ந்த வேல்டின் என்ற நபர் ஆர்சன் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இவர்களின் திருமணத்திற்கு அவர்களது பெற்றோரே வர மறுத்துவிட்டனர்.
ஏனென்றால் இருவருமே இயற்கை விரும்பிகள் என்பதனால் நிர்வாணமாக திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி இருவருமே ஒரு தீவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு 2 பேர் மட்டுமே வருகை தந்தனர். அவர்கள் இருவருமே நிர்வாண நிலையில் தான் மணமக்களுக்கு ஆசி அளித்தனர்.