நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய உறுப்பாக கல்லீரலைக் கூறலாம்.
கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கின்றன.
இந்த கல்லீரல் நோயின் முக்கிய அறிகுறிகள் உடல் நலக் குறைவு, வாந்தி, மயக்கம், களைப்பு, எடை குறைவு ஆகியவை ஆகும். மேலும் அத்தகைய கல்லீரல் நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.
அறிகுறிகள்
கருவளையம்
கல்லீரல் சரியாக இயங்காலிட்டால் உடலில் சோர்வு ஏற்பட்டு கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு சுருக்கங்களோடு காணப்படும்.
வெளுத்த சருமம்
கல்லீரலில் பாதிப்பு இருந்தால் சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து சில இடங்களில் வெள்ளையாக காணப்படும்.
அடர்ந்த நிற சிறுநீர்
உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.
மஞ்சள் நிற கண்கள்
கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம்.
வாய் கசப்பு
அடிக்கடி வாயில் அதிக கசப்பு ஏற்படுவது போன்ற உணர்வு இருந்தால் அவை கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
வயிறு வீக்கம்
கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
தோலில் அரிப்பு
கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் தோல் அதிக உணர்திறன் கொண்டதாக மாறிவிடும்.எனவே தோலில் அரிப்பும், தோல் வறண்டும் காணப்படும் மற்றும் நரம்புகள் வெளிப்படையாகக் காணப்படும்.
பசியின்மை
பசி ஏற்படவில்லை எனில் உணவில் உள்ள கொழுப்பை ஜீரணிக்க தேவையான பித்தம் இல்லாததால் உணவு அப்படியே தங்கி விடுவதே காரணம்.