வீட்டையே மிருகக்காட்சி சாலையாக மாற்றி வைத்திருக்கிறார் பிரான்ஸில் ஒரு 67 வயது தாத்தா. இந்த தாத்தாவின் வீட்டிற்கு அவர் கூறியது போல அனுமதி இன்றி உள்ளே செல்லக்கூடாதுதான்.
பிரான்ஸில் லூரே என்ற நதிக்கரையில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிற 67 வயது தாத்தா பாம்பு, ஆமை, முதலை, பூச்சிகள், விஷமுள்ள விலங்குகள் என சிறு மிருகக்காட்சி சாலையாக தனது வீட்டை மாற்றி வைத்திருக்கிறார்.
இவரது வீட்டில் இரண்டு முதலைகள், ராட்சச ஆமை, நல்ல பாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட 400 விலங்குகள் வளர்ந்து வருகிறது. இவரிற்கு விலங்குகளின் காதலன் என்ற பட்டப்பெயரும் உண்டு.
இவரின் விலங்குகள் குறித்தான நோக்கம் மற்றும் கொள்கையை பார்த்த பிரான்ஸ் அரசு, விலங்குகளை வளர்க்க அனுமதி கொடுத்துள்ளதுடன், வெளியூர்களுக்கும் இந்த விலங்குகளை அழைத்து செல்லவும் சம்மதம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.