பெங்களூரு: பெங்களூரு பெல்லந்தூர் பகுதியில் உள்ள ஏரி நேற்று பெய்த மழையின் காரணமாக மீண்டும் நுரை தள்ள தொடங்கியுள்ளது. பெங்களூரில் உள்ள பெல்லந்தூர் ஏரி சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு மிகவும் பிரபலமானது காட்சியளிக்கிறது.
1990களில் வெளியான ஹாலிவுட் சினிமாக்களில் கதாநாயகனும் கதாநாயகியும் சுவிட்சர்லாந்தில் பனி மலைகளின் பின்னணியில் ஆடிப்பாடும் காட்சிகள் இடம்பெறும்.
அதே போன்ற ஒரு தோற்றத்தை தருகிறது இந்த ஏரி. ஆனால் இவை அனைத்தும் தண்ணீரில் வெளியாகும் நச்சு கழிவுகளால் ஏற்படும் நுரை குமிழிகளாகும். கோடைக் காலங்களில் இந்த நுரையிலிருந்து தீப்பற்றிக் கொள்ளும் சம்பவங்கள் கூட நடந்துள்ளன.
கோடைக் காலங்களில் இந்த நுரையிலிருந்து தீப்பற்றிக் கொள்ளும் சம்பவங்கள் கூட நடந்துள்ளன.
கர்நாடக சுற்றுலாத் துறை கட்டணம் வாங்கிக்கொண்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கலாம் என்று வேதனை கலந்த நகைச்சுவையுடன் கூறுகிறார்கள் அந்த ஏரியாவாசிகள்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கர்நாடக அரசுக்கு கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த மாசுவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது கர்நாடக அரசு