கிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை பெண் விரிவுரையாளரும் செந்தூரனின் மனைவியுமான போதநாயகியின் மரணம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மரணத்தில் இன்னும் பல மர்மங்கள் தொடர்கிறது.என்னவென்றால் செந்தூரனின் மனைவி போதநாயகி கொலை செய்யப்பட்ட நாள் வவுனியாவில் இருந்து திருமலைக்கு விடுமுறையில் சென்று இருக்கிறார் அவர் முச்சக்கர வண்டியில் சென்றிருக்கிறார்.அந்த முச்சக்கர வண்டி சாரதி யார்? என்று இன்னும் தெரியவில்லை.
மேலும் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது, பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த நபர் குறித்த எந்த தகவலும் வெளியிடவில்லை.மேலும் இதுபோல பல தகவல்கள் உறுதி செய்யபடவில்லை.மேலும் இந்த மரணத்திற்கு அவரது கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தான் காரணமென்றும் அதை மறைக்கவே பல கதைகளை அவர் கிளப்பிவிடுகிறார் என்றும் தகவலகள் பரவி வருகிறது.
இவ்வாறு கதைகளை பரப்பினால் தாம் தப்பித்துவிடலாம் என அவர் செய்வதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.