ஈராக்கின் தென்பகுதி நகரமான பஸ்ராவில் பெண் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சுவாட் அல் அலி என்ற பெண் மனித உரிமை ஆர்வலேரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அவர் அப்பாசியா பகுதியில் உள்ள வணிகவளாகத்திற்கு அருகில் தனது காரில் ஏறிக்கொண்டிருக்கையில் நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அவரது கணவர்; துப்பாக்கி பிரயோகம் காரணமாக காயமடைந்துள்ளார்.
சமீபத்தில் பஸ்ராவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் மனித உரிமை ஆர்வலர் முன்னிலை வகித்திருந்தார்.
பஸ்ராவில் போதிய வேலைவாய்ப்பின்மை சுத்தமான குடிநீர் இன்மை உட்பட வசதியின்மைகள் காணப்படுவதை முன்வைத்து தொடர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன
இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.