Loading...
Juvisy-sur-Orge நகர காவல்நிலையத்துக்கு 100 மீட்டர்கள் அருகில் வைத்து நேற்று திங்கட்கிழமை காலை 10 மணி அளவில், நடு வீதியில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
20 வயதுடைய Athis-Mons நகரவாசியான குறித்த நபரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த இளைஞன் மீது கத்தியால் வயிற்றுப்பகுதியில் மிக ஆழமாக குத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தீயணைப்பு படையினரிற்கு தெரிவித்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்திருந்த போதும், இளைஞனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
Loading...
குறித்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஒரு சிலரே. அவர்களிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
Loading...