பரிஸில் உள்ள நான்கில் ஒரு பெண்ணுக்கு வீட்டை விட்டு வெளியே தனியே வர பயப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், கேலிகள் என பல பரிஸில் அனைத்து இடங்களிலும் இடம்பெற்று வருகின்றதை அடுத்து, அங்கு வசிக்கும் பெண்கள் வீட்டில் இருந்து துணை இல்லாமல் வெளியில் செல்ல விரும்புவதில்லை என நான்கில் ஒரு பெண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட அறிக்கையை National Observatory of Delinquency and Criminal Responses (ONDRP) நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
அதில் 26 வீதமான பெண்கள் தனியே வெளியில் செல்ல விரும்பவில்லை எனவும், இவர்களில் 50 வீதமானவர்கள் மாலை வேளைக்குப் பின்னர் கட்டாயமாக தனியே வெளியில் செல்வதில்லை எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதைவிட 40 வீதத்தினர் கொள்ளைச் சம்பவங்களுக்கு பயந்து வெளியில் தனியே செல்வதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் பரிஸ் மெல்ல, மெல்ல பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருகின்றது என குறித்த நிறுவனம் மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.