Facebook நிறுவனத்தின் இணை சேவைகளில் ஒன்றான Instagramஇன் இணை நிறுவனர்கள் அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Instagramஇன் இணை நிறுவனர்கள் இருவரும் பதவி விலகியுள்ளனர்.
படங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு பிரபலமான தளமான Instagramஇன் தலைமை நிர்வாக அதிகாரியாக கெவின் சிஸ்ட்ரோம் (Kevin Systrom) செயற்பட்டார்.
தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக மைக் கிரீகர் (Mike Krieger) பதவி வகித்துள்ளார்.
எனினுமத் குறித்த இருவரும் தாங்கள் பதவி விலகியதற்கான காரணம் எதனையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.
தங்கள் முடிவைப் பற்றி Instagram பக்கங்களிலும் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
தங்கள் படைப்பாற்றலை மற்றும் ஆர்வத்தைய மீண்டும் தூண்டிவிட சற்று ஓய்வு எடுத்துக்கொள்வதே தற்போது தங்கள் நோக்கம் Systrom தெரிவித்துள்ளார்