வேலுார் மாவட்டம், திருப்பத்துாரை அடுத்த மிட்டூர் அருகே உள்ள ரெட்டிவலசு பகுதியைச் சேர்ந்தவர், சுதா (வயது 32). இவர் நாச்சியார்குப்பத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில், சத்துணவு அமைப்பாளராகப் பணி புரிந்து வந்தார். இவரது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கணவர் இறந்த பின்பு தனியாக வசித்து வந்த சுதாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த டெய்லரான சதீஷ்(வயது 32) என்பவருக்கும், பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இருவரும், கடந்த 3 ஆண்டுகளாக, உல்லாசமாகச் சுற்றித் திரிந்தனர்.
அடுத்த மாதம் இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக, நள்ளிரவில், தன் காதலி வீட்டிற்குச் சென்றார், சதீஷ். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சி அடைய வைத்தது.
சுதா இன்னொரு நபருடன், உல்லாசமாக இருந்தார். சதீசைக் கண்டதும், அந்த நபர் தப்பி ஓடி விட்டார். சுதா, நிலைமையச் சமாளிக்க, சதீசிடம் சமாதானம் பேசினார். அதிகாலை 2 மணி வரை, பேசிய பிறகு, இருவரும் சமாதானம் அடைந்தனர். இருந்தாலும், சதீசின் மனம் ஆறவில்லை.
பின், சதீஷ் சுதாவை, ஆற்றங்கரைக்கு நைசாகப் பேசி அழைத்துச் சென்றார். அங்கு இருவரும், உல்லாசமாக இருந்தனர். பின், பெரிய கல்லை எடுத்து வந்து, சுதாவின் தலையில் போட்டார் சதீஷ். இதனால், அந்த இடத்திலேயே, துடிதுடித்து இறந்தார், சுதா. உடனே, சுதாவின் உடலை, ஆற்றங்கரையில், மண்ணைத் தோண்டிப் புதைத்து விட்டார்.
பின், அவருக்கு பயம் வந்து விட்டது. அதனால், குரிசிலாப்பட்டு காவல் நிலையத்திற்குச் சென்று, சரண் அடைந்து விட்டார். அவர் கூறியதைக் கேட்டு, காவல் நிலையத்தில் இருந்தவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். சதீசைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.