Loading...
துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ‘ஷு’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான ‘ஷு’ க்களின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
துபாய்:
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ‘ஷு’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான ‘ஷு’ க்களின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
Loading...
இதன்மூலம் உலகிலேயே மிக அதிக விலை உயர்ந்த ‘ஷு’ என்ற பெருமை பெற்றுள்ளது. அந்த ‘ஷு’ க்களில் நூற்றுக்கணக்கான வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதை ஜெட்டா துபாய் நிறுவனமும், பாசியன் ஜுவல்லரியும் இணைந்து தயாரித்துள்ளன. அதற்கு 9 மாத காலம் ஆனது.
புர்ஸ் அல் அராப் 7 நட்சத்திர ஆடம்பர ஓட்டலில் இன்று இது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு முன்பு ‘டெப்பி லிங்காம்’ ஹைஹீல்ஸ் செருப்பு விலை உயர்ந்த காலணியாக கருதப்பட்டது. அதன் மதிப்பு ரூ.110 கோடியாகும்.
Loading...