தோகாவில் இருந்து ஐதராபாத் வந்த விமானத்தில் பயணம் செய்த 11 மாத குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:
கத்தார் நாட்டின் தோகா நகரில் இருந்து ஐதராபாத்துக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. விமானம் இன்று அதிகாலை ஐதராபாத்தை நெருங்கியபோது, விமானத்தில் பெற்றோருடன் பயணம் செய்த 11 மாத குழந்தையான அர்னவ் வர்மாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் குழந்தையை அவசரம் அவசரமாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.
குழந்தையின் தந்தை அனில் வர்மா இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தார். ஆனால் அவரது குழந்தைக்கு அமெரிக்க பாஸ்போர்ட் இருந்தது.