ஐக்கிய அரபு நாடுகளில் ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வங்கதேசம் 48.5 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்தது.
அந்த அணி சார்பில் முஷ்ஃபிகுர் ரஹீம் 99 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 18 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி திணறியது. நிதானமாக ஆடிய இமாம் உல் ஹக் மட்டும் 83 ரன்களைக் குவித்தார்.
ஆஷிப் அலி 31 ரன்களும், சோயப் மாலிக் 30 ரன்களும் குவித்தனர். அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.வங்கதேசம் அணி சார்பில் முஷ்தபிஷர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பங்களாதேஷ் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. ஏற்கெனவே, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.