இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவரான சாய்னா நேவால் ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்.
ஐதராபாத்தை சேர்ந்த 28 வயதான சாய்னா நேவால், சக பேட்மிண்டன் வீரரும், ஐதராபாத்தை சேர்ந்தவருமான 32 வயது பாருபள்ளி காஷ்யப்பை காதலித்து வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இந்த காதல் ஜோடி தற்போது திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார்கள்.
சாய்னா நேவால்–காஷ்யப் திருமணத்தை இந்த ஆண்டு இறுதியில் நடத்த அவர்களது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அவர்களது திருமணம் டிசம்பர் 16–ந் தேதியும், அதைத்தொடர்ந்து பிரமாண்டமான முறையில் திருமண வரவேற்பு டிசம்பர் 21–ந் தேதியும் நடைபெற இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.