கர்நாடக மாநிலத்திலுள்ள பெல்காவில் கொடுத்த கடனை திருப்பித் தராதவரின் மனைவியை கடத்தி சென்று திருமணம் செய்ததால் பரபரப்பு.
பெல்காவில் வசித்து வரும் பசுவராஜ்க்கு திருமணமாகி பார்வதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உண்டு. இவர் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் உக்கேரி என்பவரிடம் 500 ரூபாய் கடன் வங்கியிருக்கிறார். ஆனால் இன்று வரை அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கடன் கொடுத்தவரான ரமேஷ் உக்கேரி பசுவராஜின் மனைவியை வீடு புகுந்து கடத்தி சென்றிருக்கிறார்.
உடனே பசுவராஜ் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு மனைவியை மீட்பதற்காக சென்றிருக்கிறார். ஆனால் ரமேஷ் உக்கேரி நான் உன் மனைவியை திருமணம் செய்து கொண்டேன், அதனால் அந்த பணம் வேண்டாம் என்று கூறியதுடன், உனது மனைவியை நானே வைத்துக்கொள்கிறேன் எனவும் கூறியிருக்கிறார்.
இதனால் பசுவராஜ் தனக்கு நீதி வேண்டும் என்று கேட்டு போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றுள்ளார். ஆனால் காவல் துறை இந்த புகாரை கண்டு கொள்ளவில்லை. அதன் பிறகு பசுவராஜ் மாவட்ட கலெக்டரின் அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து கொண்டு தன் மனைவியை மீட்டுதர வேண்டுமென கேட்டு போராடி வருகிறார். இந்த சம்பவம் பெல்கேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.