கம்பீரம் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ராக்கி சாவந்த் தனது மார்பகத்தை தானம் செய்ய உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் இவ்வாறு அடிக்கடி பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்துவார்.
ஹிந்தி டிவி நடிகை பிரத்யூஷா பேனர்ஜி மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டபோது மின்விசிறிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்யும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரை காப்பாற்ற முடியுமாம்.
தற்போது ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் கண் தானம் செய்திருக்கின்றனர். அவர்களை பாராட்டிய ராக்கி சாவந்த் கூறும்போது, ‘உறுப்பு தானம் என்பது மிகவும் அவசியமானது, இதை எல்லோரும் செய்ய முன்வர வேண்டும். பலரும் உறுப்பு தானம் செய்வதை கண்டு நான் நெகிழ்ந்திருக்கிறேன், அதனால் நானும் உறுப்பு தானம் செய்ய எண்ணியுள்ளேன். எனது மார்பகத்தை தானம் செய்ய முடிவு செய்திருக்கிறேன். என்னிடம் தானம் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை’ என்றார். இதனை அறிந்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.