இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497-ஐ நீக்கி, திருமண பந்தத்திற்கு பின்னர் தகாத உறவு வைத்துக்கொள்வது குற்றமில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
திருமணத்திற்கு பின்னர் தகாத உறவில் ஈடுபட்டால், ஆண்களுக்கு மட்டுமே 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.
ஆனால் அதில் ஈடுபடும் பெண்களுக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்படுவதில்லை. எனவே இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497-ஐ நீக்க வேண்டும் என ஜோசப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர், தகாத உறவில் ஆண்களுக்கு மட்டுமே தண்டனை கிடைக்கும்படி சட்டம் உள்ளது. பெண்களுக்கு குறித்து அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என கூறினார்.
இதனை கேட்ட தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் இன்று வழக்கின் இறுதி தீர்ப்பினை வழங்கினர்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பெண் என்பவள் ஆணுக்கு நிகராக நடத்தப்பட வேண்டியவள். தகாத உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல. இதில் ஈடுபடும் ஆண்களுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுவது ஏற்புடையதுமல்ல.
இந்த தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது. கணவன் என்பவன் மனைவியின் எஜமானர் அல்ல. ஒருவரது உடன்பாட்டுடன் நடக்கும் உடலறவை, பாலியல் பலாத்காரமாக கருத முடியாது.
இருவருர் விரும்பி உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் பாலத்காரமாக கருதுவதை ஏற்க முடியாது. எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் அரசியல் சட்டத்தின் 497வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது’’ என நீதிபதிகள் கூறினர்.