விளையாட்டு செய்திகள்:இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் இருக்கும் ஆபாசா காணொளி எனக் கூறி, சமூக வலைத்தளங்களில் காணொளியை வெயிட்ட இரண்டு பேரை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
வேறு ஒரு காணொளியை தொகுத்து இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொகுக்கப்பட்ட இந்த காணொளியை காரணம் காட்டி கிரிக்கெட் வீரர் ஒருவரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதானி ஒருவரும் இணைந்து மெத்தியூஸை அணியில் இருந்து விலகும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் சம்பந்தப்பட்ட அந்த ஆபாச காணொளியில் இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் போட்டி வீரர் ஒருவரே இருப்பதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிய கிண்ணப் போட்டிகளில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அணித் தலைவர் பதவியில் இருந்தும், ஒரு நாள் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஏஞ்சலோ மெத்தியூஸ் விலகுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.