இந்திய செய்திகள்:கவர்னர் பன்வாரிலால் அந்த பரிந்துரையை ஏற்று ஆலோசனை நடத்தி வருகிறார். சட்ட நிபுணர்களுடன் அவர் ஆலோசனை கேட்டுள்ளார்.
இதற்கிடையே ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் உறவினர்கள் கவர்னரை சந்தித்து 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பன்வாரிலாலை பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினரும் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிடக்கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.
மேலும் ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும், அதில் இறுதி தீர்ப்பு வரும் வரை எந்த முடிவையும் எடுக்க கூடாது” என்றும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான மனுவையும் கவர்னரிடம் அவர்கள் தாக்கல் செய்தனர்.
அவர்களது கோரிக்கையையும் கவர்னர் பன்வாரிலால் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்க்கும் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறிய பிறகே கவர்னர் உரிய முடிவை எடுத்து அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
இதனால் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரும் விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. 7 பேர் விடுதலை மேலும் தாமதமாகும் என்று தெரிய வந்துள்ளது.