கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக, விளம்பரங்கள், படங்கள் என்று வாய்ப்புக்கள் இவரை தேடி வந்தது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வி ஐ பி- 2 படத்தில் கூட கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமடைந்த மற்றுமொரு போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து “பியார் பிரேமா காதல்” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார் ரைசை. தற்போது விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள “வர்மா” படத்திலும் நடித்துள்ளார் ரைசா.
பட வாய்ப்புகள் கூடக்கூட அம்மணியின் கவர்ச்சியும் கூடிக்கொண்டே போகிறது. சமீயத்தில் “வர்மா” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை ரைசா மிகவும் கவர்ச்சியான உடையில் சென்றிருந்தார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.