யாழில் தொழிலற்று இருக்கும் இளையர் யுவதிகளை சிறந்த சுற்றுலாத்துறையில் பயிற்சியினை பெற்றுக்கொடுத்து யாழில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஏற்ப நிரந்தர தொழில்வாய்ப்பினை வழங்கும் நோக்கில் மனித நேய வேலைத்திட்ட அலுவலகத்தால் விண்ணப்பம்கள் கோரப்பட்டுள்ளது
18 முதல் 35 ற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்படுகிறது. உலகில் வளந்து வரும் தொழில் துறையில் சுற்றுலாத்துறை சிறந்து விளங்குகின்றது.
வளர்ந்து வரும் எதிர்கால உலகிற்கு நிகராக இளைஞர்களை பயிற்றுவித்து அவர்களுக்கு சிறந்த பொருளாதார ரீதியாக வருமானத்தினை பெற்றுத்தரும் இந்த துறைக்கு உடனடியாக விண்ணப்பிக்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது விண்ணப்பத்தை நெல்லியடியில் அமைந்துள்ள அலுவலத்திற்கு வருகைதந்து ஒப்படைக்க முடியும் என்பதுடன் – 076 1188 404 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும்அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.