Loading...
பழம்பெரும் நடிகை காஞ்சனா தனது பல கோடி ரூபாய் சொத்துக்களை கோவிலுக்கு தானமாக எழுதி வைத்துள்ளார்.
1970, 80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஞ்சனா. விமானப் பணிப்பெண்ணாக இருந்த காஞ்சனா 1963 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி ஆகியோருடன் நடித்திருக்கிறார். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
Loading...
சமீபத்தில் தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தில், ஹீரோவிற்கு பாட்டியாக நடித்திருந்தார். காஞ்சனா திருமணமே செய்துகொள்ளவில்லை.
இந்நிலையில் காஞ்னா அவரது 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Loading...