Loading...
சிறைச்சாலைகளில் இடம்பெற்று வருவதாக கூறப்படும் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகள் என்பவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய பாதுகாப்பு முறைமைகள் அமுல்படுத்தபட உள்ளது.
இதன்பிரகாரம் மூன்று பிரதான சிறைச்சாலைகளினது பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் பரிசோதனைகள் என்பவற்றுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Loading...
வெலிக்கட, கொழும்பு ரிமாண்ட் மற்றும் மகஸின் ஆகிய மூன்று சிறைச்சாலைகளிலும் இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வருகின்றது.
போதைப் பொருள் வியாபாரம் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகள் என்பவற்றை சிறைச்சாலைகளில் கட்டுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
Loading...