மும்பையில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்கும் போது ஒரு கார் ஒரு சிறுவனை மோதி விட்டு அலட்சியமாக செல்லும் cctv காட்சி வெளியாகி உள்ளது .இதில் தெய்வாதினமாக அந்த சிறுவனை உயிருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்பட வில்லை .
மும்பையில் கார்கோபாரில் உள்ள காமராஜ் நகரில் சிறுவன் ஒருவன் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது சிறுவனின் ஷூலேஸ் அவிழ்ந்துவிட்டதால் சிறுவன் அமர்ந்து அதனை கட்டிக்கொண்டிருந்தான்.
அப்போது அருகில் இருந்த காரை இயக்கிய பெண் சிறுவன் அமர்ந்து இருப்பதை அறியாமல் காரை வேகமாக எடுத்து அவன் மீது ஏற்றிச் சென்றுள்ளார்.
இதில் சக்கரங்களின் இடைவெளியில் சிறுவன் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்பு கார் சென்றதும் எதுவும் நடக்காதது போல் சிறுவன் வேகமாக எழுந்து நண்பர்களுடன் சேர்ந்து விளையாட தொடங்கினான்.
இத்தகைய சம்பவம் நடந்தது காரில் சென்ற பெண்ணுக்கோ, உடன் விளையாடிய சிறுவர்களுக்கோ தெரியவில்லை. இது குறித்த வீடியோ அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.