பிக்பாசை விட்டு மும்தாஜ் வெளியேறியதும் மும்தாஜிற்கு பாராட்டு விழா போன்ற ஒரு நிகழ்ச்சியை ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் மும்தாஜ் நேரில் கலந்து கொண்டு ரசிகர்களை சந்தித்து உரையாடினார்.
அப்போது அந்த மேடையில் ஒரு ரசிகர் கூறிய சம்பவம் ஆச்சரியப்பட வைத்தது. அந்த ரசிகர் மும்தாஜ் வீட்டிற்கு சென்ற போது மும்தாஜ் தேனீர் தயாரித்து கொடுத்தாராம். வீட்டு வேலைக்காரர்கள் இருக்கும்போது அவர் இவ்வாறு தானே அந்த ரசிகரை அன்பாக கவனித்தாராம். அந்த சம்பவம் அவரிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததாக அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். ஒரு வேளை, இவர் அஜித்தின் வழியில் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க நினைக்கிறாரோ…
மேலும், அங்கு வந்த பலர் மும்தாஜுடன் புகைப்படங்கள் எடுத்துகொண்டதுடன், பலர் டப்மாஸ் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.