மத்திய பிரதேசம் மண்ட்சோர் என்ற பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் பாஜக மாணவர் அணியான ABVPயை சேர்ந்தவர்கள் கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுக்க போவதாக கூறி வகுப்பறைக்கு வெளியே வந்தே மாதரம், பாரத் மாதாக்கீ ஜெ என கத்திக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்திருக்கின்றனர்.
அப்போது அருகில் இருந்த வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த கல்லூரியின் மூத்த பேராசிரியர்களில் ஒருவரான தினேஷ் குப்தா ஏபிவிபி மாணவர்களிடம் சென்று அதிகமாக சப்தம் போட்டுக் கொண்டிருப்பதால் பாடம் நடத்த முடியவில்லை. கொஞ்சம் சப்தத்தை குறையுங்கள் என கூறியிருக்கிறார்.
உடனே ஏபிவிபி மாணவர்கள் நாங்கள் யார் தெரியுமா..? நீ எங்களை பாரத் மாதாக்கீ ஜெ என்று கத்துவதை நிறுத்தச்சொல்கிறாய்.
நீ ஒரு தேசவிரோதி.. நீ தேச விரோதி என போலீசில் புகார் கொடுத்து உள்ளே தூக்கி வைத்துவிடுவோம் என மிரட்டியதோடு, எங்களில் ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து கும்பிட வேண்டும் என மிரட்டியிருக்கின்றனர்.
இதனால் மனம் நோந்து போன பேராசிரியர் ஏபிவிபியை சேர்ந்த ஒவ்வொரு மாணவர்களின் காலிலும் விழுந்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார்.
அப்போது சில மாணவர்கள் அவர்களுக்கே கூச்சம் தாங்காமல் அங்கிருந்து நகன்று சென்றனர்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏபிவிபியின் இந்த அராஜகத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.