ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 30 பெண்களை கொன்று உட்கொண்ட சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருவரை கொலை செய்ததாக சந்தேகித்து, குறித்தகப் பெண்ணின் கையடக்கத் தொலை பேசியை ஆராய்ந்த போது, இவர் தனது கணவரோடு சேர்ந்து கொல்லப்பட்ட பெண்ணின் உடலை வெட்டி அதனுடன் புகைப்படம் எடுத்திருந்தது தெரியவந்தது.
அதன் பின்னர் இவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் அங்கு மனிதர்களின் உடல் பாகங்கள் குளிர்சாதனப் பெட்டியின் ஃப்ரீசரிலும், ஊறுகாய் போத்தல்களிலும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், இந்த பெண் ஏற்கனவே இது போன்று 30 பெண்களை கொன்று தின்றது அம்பலமாகியுள்ளது.
அவளது கணவருக்கு காச நோய் உள்ளதால் அவரை இன்னும் விசாரிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. அத்துடன் அப் பெண்ணிற்கு கொடூர சிறை தண்டனை வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.