ஆண்களிடம் அதிகம் பேசப்படும் டாபிக் சிக்ஸ் பேக். அதில் உள்ள மோகம் ஆண்களுக்கு அதிகம் உண்டு. அதனால் ஆபத்து என்பதை அறியாமல் ஆசை வைக்கிறார்கள்
ஆண்களிடம் அதிகம் பேசப்படும் டாபிக் சிக்ஸ் பேக். அதில் உள்ள மோகம் ஆண்களுக்கு அதிகம் உண்டு. அதனால் ஆபத்து என்பதை அறியாமல் ஆசை வைக்கிறார்கள்.
பொதுவாக ஆண்கள் கட்டுகோப்பான உடலையே மிகவும் ஆசைப்படுவர். சிக்ஸ் பேக் வைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அதனை வைத்த பின், மெயின்டெயின் செய்வது அதை விட கடினம்.
சிக்ஸ் பேக்கின் மோகம் குறையாமல் ஆண்களிடம் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் அதில் இருக்கும் ஆபத்தை பலர் அறியவில்லை.
சிக்ஸ் பேக் மெயின்டெயின் செய்வதற்கு உடற்பயிற்சி மட்டுமல்லாமல் ஸ்டிராய்டு உட்கொள்கின்றனர். ஸ்டிராய்டு எடுத்து கொள்வதால் ஆண்மை குறைவு, கல்லீரல் புற்றுநோய், குரலில் மாற்றம், முடி வளர்ச்சி, பார்வை குறைபாடு போன்றவற்றை ஏற்படும்.
உடல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தினமும் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சிக்ஸ் பேக் வைப்பவர்கள் உடலின் கொழுப்பை 9 சதவீதமாகவும், நீர்ச்சத்தை 40 சதவீதமாகவும் குறைத்து புரதசத்தை அதிகரிக்க வைக்கின்றனர். இப்படி புரதசத்தை அதிகரித்தால் கல்லீரல், சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகும்.
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் உடலில் வெப்பம் அதிகமாகும். வலிமையான தசைநார்கள் தான் அவசியம். அது இருந்தால் உடல் வலி, மூட்டு வலி, முதுகு வலி ஏற்படாமல் தடுக்கும்.
சிக்ஸ் பேக் வைப்பதற்கு மேற்கொள்ளும் உடற்பயிற்சி கடுமையான உடல் வலி, பிரச்சனைகளைதான் கொடுக்கும். அழகுக்கு ஆசைப்பட்டு உடலின் ஆரோக்கியத்தை இழந்துவிடாதீர்கள்!