பிரான்ஸ் நாட்டில், 20 இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்காரம் மேற்கொண்ட 13 வயதுடைய சிறுவன் ஒருவன் Picardie நகரில் வைத்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். அதிர்ச்சியளிக்கும் விதமாக இவனது முதல் பாலியல் குற்றத்தினை அவனது 9 ஆவது வயதில் மேற்கொண்டுள்ளான் என காவல்துறையினர் தெரிவித்தனர். Argoules (Somme) நகரில் வசிக்கும் இவன், இதுவரை 20 பெண்களுக்கு மேல் பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல்கள் என பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான்.
கடந்த 2014ம் ஆண்டில் சிறுவனுக்கு 9 வயதாக இருக்கும் போது இளம் பெண் ஒருவரை மிக மோசமாக பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த சிறுவன் முன்னதாக சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் வைக்காட்டிருந்ததாகவும், ஆனால் அவன் அங்கிருந்து தப்பி ஓடி மீண்டும் பாலியல் குற்றங்களை செய்துள்ளான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.