கனடாவில் இறந்த பிஞ்சுக் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய வழக்கில், லண்டன் நீதிமன்றம் கனேடிய இளம் தாயார் ஒருவருக்கு தண்டனையை விதித்துள்ளது.
கனடாவின் Amherstburg பகுதியைச் சேர்ந்தவர் Samantha Richards (வயது 25). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தமக்கு பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி Richmond Row பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசியதாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் அப்பெண், தன் கர்ப்பத்தை இரகசியமாக பாதுகாத்து வந்ததாகவும், தாம் தங்கியிருந்த குடியிருப்பின் குளியலறையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
குழந்தை பிறக்கும்போதே இறந்து பிறந்ததாகவும், இதனால் அந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்று அவர் குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தை அடுத்து விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், அவருக்கு தண்டனை விபரத்தை அறிவித்துள்ளது.
அதில் குறித்த இளம் தாயாருக்கு சிறை தண்டனை விதிக்கப்படவில்லை எனவும், ஆனால் 2 ஆண்டு காலம் நன்னடத்தை சோதனைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது