இந்தோனேசிஷியாவில் ஏற்பட்ட சுனாமி இலங்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் இன்று மாலை வரை பாணந்துறையிலிருந்து அம்பாந்தோட்டையூடாக காலி மற்றும் மாத்தறை கரையை அண்மித்த கடலலைகள் 2 தொடக்கம் 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெழும். எனினும் அலைகள் கரையை அண்மித்த பிரதேசங்களுக்குள் பிரவேசிக்காது என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை வளிமண்டலியல் திணைக்கள வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் இவ் விடயம் தொடர்பாக தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“தற்போது பெரும்பாலான மலையகப்பகுதிகளில் காணப்படும் மழையுடனான காலநிலை சில தினங்களுக்கு நீடிக்கும்.
அதன்படி மத்திய வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை தொடரும். மேல் மற்றும் தென் மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. இப் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும்.
வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், வடமேல் மற்றும் தென் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும். எனவே குறித்த கடற்பிராந்தியங்கள் கொந்தழிப்புடன் காணப்படும். எனினும் அண்மித்த பிரதேசங்களுக்கு பாதிப்புக்கள் எவையும் ஏற்படாது.
கடற்பிராந்தியங்களில் புத்தளம் தொடக்கம் பொத்துவில் ஊடாக கொழும்பு, காலி மற்றும் ஆகிய பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
இதன் போது தென் மேற்காக வீசும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 20 தொடக்கம் 30 கிலோ மீற்றரராக காணப்படும்.
அதிகமாக இரவு வேளைகளிலேயே இம் மழையுடனான காலநிலை எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இடி, மின்னல்களிலிருந்து ஏற்படக் கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்வதற்காக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என்றார்.