யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் வாழைக் குலைகள் திருட்டுச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன என்று வாழைக்குலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்
நீர்வேலி, கோப்பாய், உரும்பிராய், சிறுப்பிட்டி ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக வாழைக் குலைகள் திரு டப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வாழைக்குலை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குழுவொன்று கடந்த வியாழக்கிழமை ஊர்மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட் டும் உள்ளது.
குறித்த குழு கோப்பாய்ப் பிரதேசத்தில் உள்ள வாழைத்தோட்டத்தில் இரவு வேளையில் வாழைக்குலைகளை களவாக வெட்டிக் கொண்டு சென்ற சமயம் பொதுமக்கள் அவதானித்துவிட்டு திருடர்களைத் துரத்தியுள்ள னர்.
திருட்டுக் குழுவைச் சேர்ந்த ஒருவர் அகப்பட்டுக்கொள்ள ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அகப்பட்டவர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
‘‘வாழைகளை நாள்தோறும் சிறப்பாகப் பராமரித்து அவற்றின் அறுவடையைப் பெறும் காலத்தில் குலைகளை திருடர்கள் வெட்டிச் சென்று விடுகின்றனர்.
வாழை மரங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் மாலைப் பொழுதுகளில் செல்லும் திருடர்கள் முற்றிய குலைகள் எங்கெல்லாம் உள்ளன என்பதை இனங்கண்டு அவற்றை காவுகொண்டு விடுகின்றனர்.
நாள்தோறும் பல ஆயிரங்கள் இவர்களால் நஷ்டப்பட வேண்டியுள்ளது’’ என்று வாழையை பயிர்செய்யும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.