Loading...
ஐக்கிய நாடுகளின் 73வது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ள நிவ்யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார்.
தோஹாவில் இருந்து புறப்பட்ட கட்டர் விமான சேவைக்குச் சொந்தமான கிவ் ஆர் 668 என்ற விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Loading...
இந்த முறை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையில் யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள நல்லிணக்கம் தொடர்பில் அதன்கான செயற்பாடுகள் குறித்தும் தெளிவுப்படுத்தி இருந்தார்.
அத்துடன், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் மற்றும் பொதுநல வாய நாடுகளின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...