இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்து இருக்கிறது. காஷ்மீரின் பூன்ச் பகுதியில் பாகிஸ்தான் இந்த அத்துமீறலை நிகழ்த்தி உள்ளது.
அந்த ஹெலிகாப்டர் உள்ளே வருவது அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்திய ராணுவ வீரர்கள் வரிசையாக கடத்தி கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். போலீசாரும் கடத்தி கொலை செய்யப்படுகிறார்கள்.
எல்லைக்குள் வந்தது சரியாக 12.05 மணிக்கு இந்த ஹெலிகாப்டர் முதலில் இந்திய எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் 30 நிமிடம் இந்திய எல்லைக்குள்தான் சுற்றி இருக்கிறது.
கடைசியாக காஷ்மீர் எல்லையில் சுற்றிவிட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்கும் காஷ்மீரை நோக்கி சென்றுள்ளது.
எதனால் தவறு : இரண்டு நாடுகளின் ஒப்பந்தம்படி இது தவறாகும். அனுமதி இல்லாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் அடுத்த நாட்டிற்கு செல்ல கூடாது. அப்படி செல்லும் பட்சத்தில் அதை சுட்டு வீழ்த்த இரண்டு நாட்டிற்கு உரிமை உள்ளது. இது அமைதி உடன்படிக்கை மீறலாகும்.
சுடுவதற்கு முயற்சி : இதனால் இந்திய ராணுவ வீரர்கள் அதை சுட முயற்சி செய்து இருக்கிறார்கள். கால் மணி நேரம் இப்படி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள்.
அது ராணுவம் விமானம் போல தெரியவில்லை, எதோ ஒரு தனியார் விமானம் என்று கூறப்படுகிறது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது.
பதட்டம் அதிகரிப்பு ஆனால் அந்த ஹெலிகாப்டர் சுடப்பட்டதா இல்லையா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. தற்போது ஐநாவில் மாநாடு நடந்து கொண்டு இருக்கிறது.
இதில் இந்தியா பாகிஸ்தான் இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த அத்துமீறல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
#WATCH A Pakistani helicopter violated Indian airspace in Poonch sector of #JammuAndKashmir pic.twitter.com/O4QHxCf7CR
— ANI (@ANI) September 30, 2018