மது நாட்டில் ஜாதி, மதம் என்பது ஒரு வெறியாக வேர்வரை பரவி இருக்கிறது. இதற்கு உதாரணம் வேண்டும் என்றால் பல திரைப்படங்களை, பல கலவர கொலைகளை நாம் காட்டலாம். இன்று வளர்ந்து வரும் சமுதாயம் இதை ஆதரிப்பதில்லை என்ற பிம்பம் நகர்ப்புறங்களில் மட்டுமே காணப்படுகிறது.
இன்றும் கிராமங்களில் வேறு சாதி, மதத்தில் பெண்ணெடுத்து திருமணம் செய்வது என்பது நடக்காத காரியம். மேலும், அப்படியே யாராவது காதலித்து திருமணம் செய்துக் கொண்டாலும் கௌரவ கொலை என்ற பெயரில் கொன்றுவிடுவார்கள்.
ஆனால், இந்தியாவின் சினிமா பிரபலங்களான பல நடிகர் – நடிகைகள் வேறு மதத்தில், வேறு சாதியில் காதலித்து கலப்பு திருமணம் செய்து ரசிகர்களுக்கு, மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்கள்….
அமீர்கான் – கிரண் ராவ்!
மிஸ்டர் பர்பெக்ட் என்று செல்லமாக அழைக்கப்படும் அமீர்கான் 2002ம் ஆண்டு தனது முதல் மனைவி ரீனாவை விவாகரத்து செய்தார். இதன் பிறகு தனது லகான் படத்தில் உடன் பணிபுரிந்த கிரண் ராவை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார் அமீர். அமீர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்.
கிரண் ராவ் ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத மதசார்பற்றவராக கருதப்படும் நபர். இவர்களுக்கு ஆறு வயதில் அசாத் ராவ் கான் என்ற மகன் இருக்கிறார்.
ஷாருக்கான் – கெளரி
பாலிவுட் பாட்ஷா என்று புகழப்படும் ஷாருக் இன்றும் பெண்களால் விரும்பப்படும் ஒரு ஹீரோ. கிங் கான் ஷாரூக் கௌரியை தனது 18 வயதில் இருந்தே காதலித்து வருகிறார். 1991ல் இந்த ஜோடி திருமணம் செய்துக் கொண்டனர். ஷாருக் ஒரு இஸ்லாமியர் மற்றும் கெளரி ராஜ்புத் சேர்ந்தவர்.
இவர்கள் இன்றும் ஒரு வெற்றிகரமான தம்பதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஹ்ரித்திக் ரோஷன் – சுசேன் கான்
ஆசியாவின் ஆணழகன் என்று புகழப்படும் ஹ்ரித்திக் ரோஷனை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. நடிப்பு, நடனம், ஆக்ஷன் என்று அனைத்திலும் தூள் கிளப்பும் நடிகர். இவ தனது குழந்தை பருவ தோழியான சுசேன் கானை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
2000ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள். இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்ட போதிலும், அவ்வப்போது நேரில் பார்த்து பேசிக் கொண்டு நட்புடன் தான் இருந்தனர். இப்போது மீண்டும் கூடிய விரைவில் இந்த ஜோடி சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக அறியவருகிறது.
சயப் அலிகான் – கரீனா கபூர்!
சயப் அலிகானுக்கு ஏற்கனவே திருமணமாகி இளம் வயதில் ஒரு மகள் இருக்கிறாள். பட்டோடியின் நவாபான சயப் அலிகானின் முதல் மனைவியும் பஞ்சாபி தான். இவர் இரண்டாவதாக திருமணம் செய்திருக்கும் கரீனா கபூரும் பஞ்சாபி தான். இந்த ஜோடிக்கு தைமூர் அலி கான் என்ற மகன் இருக்கிறான்.
அர்சாப் கான் – மல்லிகா அரோரா
சல்மான் கானின் அண்ணன் அர்சாப் கான், பாலிவுட்டின் ஹாட் மாம் என்று அழைக்கப்படும்மல்லிகா ஆரோராவை திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்கள் இருவரும் 1998ல் திருமணம் செய்துக் கொண்டனர். அர்சாப் கான் ஒரு இஸ்லாமியர் மற்றும் மல்லிகா அரோர தென்னிந்திய இந்து ஆவார்.
ரித்தேஷ் – ஜெனிலியா
ஜெனிலியா மங்களூர் கத்தோலிக்க கிறிஸ்துவர் மற்றும் ரித்தேஷ் மகாராஸ்டிராவை சேர்ந்த குடும்பத்தை சார்ந்தவர். இந்த கியூட் ஜோடி 2012ல் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
சஞ்சய் தத் – மன்யாதா
சஞ்சய் தத் மன்யாதாவை திருமணம் செய்துக் கொண்டார். மன்யாதா ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண். இவரது இயற்பெயர் தில்நவாஸ் ஷெய்க். இத ஜோடிக்கு ஆண் – பெண் இரட்டையர் குழந்தைகள், இவர்களுக்கு எட்டு வயதாகிறது.
குணால் கெமு – சோஹா அலி கான்
குணால் மற்றும் சோஹா அலி கான் நீண்ட காலமாக டேட் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் 2014 ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். சயப் அலி கானின் இளைய சகோதரியான சோஹா அலி கான் பட்டோடி நவாப் மற்றும் குணால் இந்து. இவர்கள் இருவருக்கும் இனாயா என்ற குழந்தை இருக்கிறார்.
பார்ஹான் அக்தர் – அதுனா
பார்ஹான் அக்தர் அதுனாவை டில் சாத்தா ஹாய் என்ற படத்தில் 2001ல் கண்ட போது சந்தித்தார். இவர்களது காதல் கதை பல படங்களில் கண்டது போல தான் இவர் இந்து, அவர் இஸ்லாமியர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். எதிர்பாராத விதமாக இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டனர்.
யுவராஜ் சிங் – ஹாசெல் கீச்
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புற்றுநோயை வென்று வந்து ஹாசெல் கீச்சை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் திருமணத்திற்கு முன் சில காலம் டேட் செய்து வந்தனர். யுவராஜ் சிங் ஒரு சீக்கியர் மற்றும் ஹாசெல் பிரிட்டிஷ் – மௌரிஷியன் கிறிஸ்துவர் ஆவார்.