நெயில்சன் இந்தியா வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி சிலகாலத்திற்கு முன் இந்தியர்கள் மாதாந்திர அடிப்படையில் அதிகபட்சம் 4 ஜி.பி. டேட்டா மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களும், டேட்டா-வும் கிடைப்பதால் உலகளவில் ஸ்மார்ட்போன் அதிகம் விற்கப்படும் சந்தையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என நெயில்சன் நிறுவனம் தனது அறிக்கையில் அறிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் தலைவர் கூறுகையில், ‘அதிவேக 4ஜி இண்டர்நெட், விலை குறைந்த மொபைல் போன்கள் மற்றும் இலவச தடையில்லா கால் வசதி அகிய காரணங்களால் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அசுர வேகத்தில் அதிகரிக்க துவங்கியது’ என அவர் தெரிவித்தார்.
எதிர்பாராதவிதமாக திடீரென குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகப் படுத்தியதால், புதிய பயனர்கள் அதிகம் பேர் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க துவங்கினர்.